கொரோனா படுத்தும் பாடு... டாஸ்மாக் கடை முன்பு கட்டம் கட்டி மது விற்பனை

சென்னை: கொரோனா பரவலை தடுக்கும் வகையில் டாஸ்மாக் கடைகளுக்கு வரும் குடிமகன்களை வரிசையாக கட்டம் கட்டி அந்த கட்டத்தில் நிற்க வைத்து மதுவிற்பனை செய்யப்படுகிறது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் இதுவரையில் 4 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகத்தில் வணிக வளாகங்கள், ஐடி நிறுவனங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளது. தமிழக அரசின் உத்தரவுப்படி டாஸ்மாக் பார்களும் மூடப்பட்டுள்ளன. ஆனால், டாஸ்மாக் கடைகளை மூட அரசு உத்தரவு பிறப்பிக்கவில்லை. எனவே, குடிமகன்கள் அதிகமாக வரும் டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தற்போது டாஸ்மாக் கடைகளுக்கு முன்பாக 2 அடிக்கு ஒரு கட்டம் போடப்பட்டு அதில் மதுவாங்க வரும் ஒவ்வொருவரும் தனித்தனியே ஒருவர் பின் ஒருவராக நின்றே மது வாங்கி செல்ல வேண்டும் என நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நேற்று முதல் இந்த நடைமுறை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளின் முன்பு அமலுக்கு வந்துள்ளது.  

Related Stories: