தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு 584 உயர்வு

சென்னை:  சர்வதேச சந்தையில் நிலவும் தங்கம் விலைக்கு ஏற்ப, இந்தியாவிலும் தங்கம் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. கொரோனாவால் சர்வதேச அளவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டு வருவதால், முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீட்டை அதிகரிக்க தொடங்கினர். இதனால், சென்னையில் கடந்த 6ம் தேதி ஒரு சவரன் 33,760 என்ற உச்சத்தை தொட்டது. இதன்பிறகு கடந்த 7ம் தேதியில் இருந்து சரிய தொடங்கியது.

சர்வதேச சந்தையில் ஒரு டிராய் அவுன்ஸ் (31.103 கிராம்) 1,700 டாலரை தொட்ட தங்கம், 1,500 டாலருக்கு கீழ் சரிந்தது. இதனால், தொடர்ந்து 10 நாட்களில் 3,200 குறைந்தது. இந்நிலையில், சர்வதேச சந்தையில் தங்கத்தில் முதலீடு அதிகரிக்க தொடங்கியதால், தங்கம் விலை மீண்டும் உயர தொடங்கியுள்ளது. இதன்படி 3வது நாளாக நேற்று சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு 584 உயர்ந்துள்ளது. தொடர்ந்து 3 நாட்களில் 1,056 அதிகரித்துள்ளது. மேலும் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: