சாத்தூர் அருகே வெடி விபத்து நடந்த பட்டாசு ஆலையில் தென் மண்டல காவல் ஐ.ஜி நேரில் ஆய்வு

சாத்தூர்: சாத்தூர் அருகே வெடி விபத்து நடந்த பட்டாசு ஆலையில் தென் மண்டல காவல் ஐ.ஜி ஆய்வு மேற்கொண்டுள்ளார். 8 பேர் உயிரிழந்த பட்டாசு ஆலையில் விபத்து எப்படி நடந்தது என்று ஐ.ஜி.சண்முக ராஜேஸ்வரன் விசாரணை நடத்தினார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 30 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது உராய்வின் காரணமா பட்டாசு விபத்து ஏற்பட்டது.  மேலும் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் சம்பவ இடத்தில் 6 பேர் உயிரிழந்தனர், 4 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

படுகாயம் அடைந்தவர் 4 பேரும் சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்கை அளிக்கப்பட்டு வருகிறது. பின்பு ஒருவர் சிகிச்கை பலனின்றி உயிரிழந்தார். தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். 25 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை அணைத்தனர். மேலும் இருவருக்கு சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்கை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: