சென்னையில் 3வது நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிப்பு 40 பேருக்கு கொரோனா அறிகுறி? ஒரு வாரமாக கடையில் வேலை பார்த்ததால் பொதுமக்கள் பீதி

சென்னை : அயர்லாந்தில் இருந்து சென்னை வந்த 21 வயது இளைஞருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. மேலும் உ.பி. வாலிபருடன் தங்கியிருந்த 14பேர் உட்பட40  பேருக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களை தனி அறைகளில் வைத்து பரிசோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் ஓமன் நாட்டில் இருந்து வந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 45 வயதானவருக்கு கொரேனா வைரஸ் பாதிப்பு இருப்பது முதன் முதலில் கண்டறியப்பட்டது. இவருக்கு  ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் குணமாகி வீடு திரும்பி விட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.  இதனைத் தொடர்ந்து உத்தர பிரதேசத்தில் இருந்து சென்னை வந்த யுவான்(20) என்பவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன்பிறகு அவர் தனிமைபடுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகிறார்.

இவர் கடந்த 10ம் தேதி டெல்லியில் இருந்து புறப்பட்டு 12ம் தேதி சென்னை வந்தாக கூறப்படுகிறது. சென்னை வந்து தனது நண்பரை சந்தித்து வேலை ேதடியுள்ளார். இதன்பிறகு அரும்பாக்கத்தில் உள்ள சலூன் கடையில் பணிக்கு ேசர்ந்துள்ளார். அவர் எம்எம்டிஏ காலனி பஸ் நிலையம் அருகில் அரும்பாக்கம் அசோநகரில் உள்ள மாரியம்மன் கோயில் அருகில் நண்பர்கள் 8 பேருடன் தங்கியுள்ளார். மேலும், தொடர்ந்து 3 நாட்கள் அந்தப் பகுதியில் உள்ள சலூன் கடையில் பணிபுரிந்துள்ளார். இதற்கிடையில் அவருக்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது. இதனால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய ரத்த மாதிரியை பிரசோதனை செய்த பிறகு அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் இவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிக்கும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.

தற்போது அவருடன் தங்கியிருந்த 8 பேர் மற்றும் கீழ் வீட்டில் இருந்த 4 பேர் மற்றும் அவருடன் சென்னை வந்து சவுகார்பேட்டையில் தங்கியுள்ள 2பேர்  என 14 பேர் கண்டறியப்பட்டு அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் நேற்று முன்தினம் இரவு பூந்தமல்லியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் 14 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகின்றனர். இதை தவிர எதிர்வீட்டைச்சேர்ந்த 26 பேரும் பூந்தமல்லி கோரண்டைன் வார்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் 40 பேருக்கு கொரோனா அறிகுறி உள்ளதா என பரிசோதிக்கப் படுகிறது. அவர் உத்திரப்பிரதேசத்தில் இருந்து பதிவு செய்யப்படாத பொது பெட்டியில்தான் வந்துள்ளார். இதனால் வரும் வழியில் அவருடன் பலர் பயணித்துள்ளனர். அவர்களுக்கும், யுவான், கொரோனா நோயை பரப்பியிருக்கலாம் என்றும் சந்தேகப்படுகிறது. அவர்களில் பலர் வேறு மாநிலங்களில் இறங்கியிருக்கலாம். பலர் சென்னைக்கு வந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இதனால் தமிழகம் முழுவதும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்துள்ளார். சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞரான இவர் அயர்லாந்து நாட்டில், டூப்ளின் நகரில் படித்து வந்தார். கெரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த 17ம் தேதி அயர்லாந்தில் இருந்து  சென்னை வந்துள்ளார். அப்போதை அவருக்கு கொரோனா அறிகுறி இருந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் காய்ச்சல் இல்லாத காரணத்தால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டார். நேற்று முன்தினம் அவருக்கு காய்ச்சல் அதிகரித்ததால் நேற்று சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, தனிமைப்படுத்தப்பட்ட அறையில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அவரது ரத்த மாதிரிகள், கிங்ஸ் ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அயர்லாந்து நாட்டில் இருந்து சென்னை வந்த நபருடன் விமானத்தில் பயணம் செய்த நபர், அவரது குடும்பத்தை சேர்ந்தோர் மற்றும் தொடர்பில் இருந்தவர்கள் விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற காரணத்தால், சென்னையில், பலருக்கு கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த ஒரு லட்சத்து, 94 ஆயிரத்து, 236 பேர் விமான நிலையங்களில் சோதனை செய்யப்பட்டுள்ளனர். இதில் கொரோனா அறிகுறிக்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்படும், 3,481 பேர் தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் மற்றும் வீட்டிலேயே தொடர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை, 320 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  இதில் மூன்று பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 232 பேருக்கு பாதிப்பு இல்லை. 85 பேருக்கு இன்று முடிவுகள் தெரிய வரும். இந்த முடிவுகளின் அடிப்படையில் மேலும் ஒரு சிலர் பாதிக்கப்பட்டிருக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: