சிட்னி: ‘பரிசோதனை முடிவுகள் வந்து விட்டன. எனக்கு கொரோனா பாதிப்பில்லை’ என்று ஆஸி. கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கொரோனா பீதி துவங்கிய வேளையில் 2 வார காலமும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் சுற்றுப்பயணத்தில் இருந்தார். ஆஸ்திரேலியா-நியூசிலாந்து ஒருநாள் போட்டி தொடருக்காக கடந்த வாரம் நாடு திரும்பினார். ஆஸ்திரேலியாவில் அவர் கால் வைத்ததுமே, விமான நிலையத்தில் இருந்து, நேராக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.