கொரோனாவை தடுக்க என்ன பண்றீங்க?: என்ன பண்ணலாம்?: மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை

டெல்லி: சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை, உலகளவில் 8,944ஆக அதிகரித்துள்ளது.  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,18,766 ஆக உயர்ந்துள்ளது. அதில், 84,386 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவல், நான்கு கட்டங்களாகப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற நிலையில், இந்தியா தற்போது 2வது  கட்டத்தில் உள்ளது.

இந்தியாவில் வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 169ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 31ம் தேதி வரை மூட  உத்தரவிடப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் அரசு   மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரில் 8ம் வகுப்பு வரை எவ்வித தேர்வும் எழுதப்படாமல், அனைவரும் அடுத்த வகுப்புக்கு செல்லும் வகையில் ‘ஆல் பாஸ்’ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள  பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் செமஸ்டர் தேர்வுகளை ஒத்திவைக்க யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா கட்டுப்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆலோசனை நடத்தயுள்ளார். ஆலோசனையின் போது முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளது.  இதற்கிடையே, பிரதமர் மோடி இன்றிரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: