கொரோனா வைரஸ் தாக்கியதை கண்டுபிடிப்பது எப்படி? என்பது குறித்து சென்னை கிங் இன்ஸ்ட்டியூட் ஆய்வகம் தகவல்!

சென்னை: தமிழகத்தில் இதுவரை இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்ட்டியூட் ஆய்வு மையத்தில் கொரோனா நோய் தொற்று ஒருவரை தாக்கியிருக்கிறது என்பதை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அண்மையில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலம் சென்று வந்தவர்கள், அல்லது அப்படி சென்று வந்தவர்களுடன் கையை குலுக்கி நெருங்கி பழகியவர்களுக்கு தொடர்ச்சியாக கடுமையான காய்ச்சல் மற்றும் இருமல் வந்தால் மருத்துவ பரிசோதனை அவசியமாகிறது. குறிப்பாக கொரோனா வைரஸ் தாக்கம் இருக்குமோ என்ற சந்தேகம் எழும் பட்சத்தில் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று உரிய மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளலாம். அதன்படி சம்பந்தப்பட்ட நோயாளியிடம் சேகரிக்கப்படும் ரத்தமாதிரி கிண்டி ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்படுகிறது. ரத்தத்தில் உள்ள டி.என்.ஏவில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்பதை அறிய ஆய்வகத்தில் ஆய்வு முடிந்த பின்னர், அதில் குறிப்பிட்ட மாற்றம் நிகழ்கிறதா என்பதை கண்டறிய 48 மணி நேரம் எடுத்து கொள்கிறார்கள்.

சீனாவில் இருந்து உலக சுகாதார நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கொரோனா பாதிப்புக்குள்ளானவரின் ரத்தமாதிரியுடன் ஒத்துப்போனால் பாசிட்டிவ் அதாவது கொரோனா பாதிப்பு உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக சிவப்பு வண்ணத்தில் கோடு ஒன்று மேல் நோக்கி செல்வது போல குறிப்பிடப்படுகிறது. ஒருவேளை ஆய்வு முடிவிற்கு பின்னர் அது சாதாரண காய்ச்சல் என்பது தெரியவந்தால் கிடை மட்டமாக மெல்லிய கருப்பு வண்ண கோடு குறிப்பிடப்படுவதாக ஆய்வக ஊழியர்கள் தெரிவித்தனர். ஒருவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டால் இரண்டு தினங்கள் கழித்து தான் உறுதி செய்யப்படும் என்றும் அந்த வகையில் தான் ஆம்பூரை சேர்ந்த 20 வயது இளைஞருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக ஆய்வக ஊழியர்கள் தெரிவித்தனர். தினமும் குறைந்தபட்சம் 10 முறையாவது சானிடைசர் மற்றும் சோப்பு கொண்டு கைகளை கழுவுவதோடு கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்த்து அத்தியாவசிய தேவையின்றி வீட்டில் பாதுகாப்புடன் இருந்து, சுத்தம் பேணி கொரோனா பரவுவதை தவிர்ப்போம்.

Related Stories: