எதிர்க்கட்சியின் கடும் எதிர்ப்புக்கு இடையே மாநிலங்களவை நியமன உறுப்பினராக பதவியேற்றார் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் 46வது தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய், கடந்த ஆண்டு நவம்பர் 17ம் தேதி ஓய்வு பெற்றார். இவர், அயோத்தி பிரச்னை உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கினார். இந்நிலையில், இவரை மத்திய அரசின் பரிந்துரைப்படி, மாநிலங்களவை நியமன எம்பி.யாக நியமிக்க, ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். மாநிலங்களவைக்கு இலக்கியம், அறிவியல், கலை மற்றும் சமூகசேவை உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கும் 12 பேரை நியமன உறுப்பினராக நியமிப்பது வழக்கம்.

இந்த நிலையில் மாநிலங்களவையில் நியமன உறுப்பினராக இருந்த மூத்த வழக்கறிஞர் கே.டி.எஸ்.துள்ஷி ஓய்வு பெற்றதை அடுத்து ஏற்பட்ட காலியிடத்துக்கு முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மாநிலங்களவை நியமன உறுப்பினராக பதவியேற்றார். உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயை மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்க மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளதை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்தது. மாநிலங்களவை எம்பி ஆக ரஞ்சன் கோகாய் பதவி ஏற்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் எம்.பி-க்கள் வெளிநடப்பு செய்தனர்.

Related Stories: