கொரோனா தாக்கம் எதிரொலி: உத்திரப்பிரதேசத்தில் 8-ம் வகுப்பு வரை அனைத்து அரசுப்பள்ளி மாணவர்களும் பாஸ்...மாநில அரசு நடவடிக்கை

லக்னோ: கொரோனா அச்சுறுத்தலால் பள்ளிகள் செயல்பட முடியாத நிலையில் 8ம் வகுப்பு வரை அனைவரும் பாஸ் என உத்திரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் சுகாதார அச்சுறுத்தலை  ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவை எதிர்கொள்ள முடியாமல் உலக நாடுகள் திணறி வருகிறது. கொரோனா வைரசுக்கு உலக முழுவதும் 7950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மலேசியா, பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து பயணிகள் இந்தியா வர மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 13 பேர்  மீட்கப்பட்டுள்ளார்; 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 25 வெளிநாட்டினர் உள்பட 147 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் தீவிர நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், உத்திரப்பிரதேசத்தில் கொரோனா எதிரொலியாக அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ, மாணவிகள் தேர்வெழுத தேலயைில்லை; 8ம் வகுப்பு வரை அனைவரும் பாஸ் என முதல்வர் யோகி  ஆதித்தியநாத் அறிவித்துள்ளார். உத்திரப்பிரதேசத்தில் மார்ச் 23-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை தேர்வு நடக்கவிருந்த நிலையில், அரசுப்பள்ளிகள் ஏப்ரல் 2-ம் தேதி வரை பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் 8-ம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து  செய்யப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் பள்ளிகள் செயல்பட முடியாத நிலையில் 8ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாநிலளவில் பாதிப்பு:

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கேரளா – 24 (வெளிநாட்டினர் – 2), மகாராஷ்டிரா- 42 (வெளிநாட்டினர் – 3), உ.பி.-14 (வெளிநாட்டினர் – 1), டெல்லி – 8, கர்நாடகா – 11 பேருக்கு கொரோனா பாதிப்பு  ஏற்பட்டுள்ளது. மேலும் லடாக் – 6, ராஜஸ்தான் -2 (வெளிநாட்டினர் – 2), தெலுங்கானா – 3 (வெளிநாட்டினர் 3), தமிழ்நாடு -1, ஜம்மு & காஷ்மீர் – 3, பஞ்சாப் -1, ஹரியானா – 1 (வெளிநாட்டினர் -15), ஆந்திரா – 1, ஒடிஷா – 1, உத்தரகண்ட் – 1 என  மொத்தம் 147 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

Related Stories: