மேட்டூர் அணை, ஆத்தூர் வைகை அணை மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய இடங்களில் ரூ.13.71 கோடி மதிப்பில் நவீன வசதிகள் உருவாக்கப்படும்: மீன்வளத்துறை அறிவிப்பு

சென்னை: 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளியன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு நேற்று நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று மீன் வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை, கால்நடை துறை ஆகிய மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது விவாதத்துக்கு பதில் அளித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

* கிருஷ்ணகிரி பாரூரில் மீன் வளர்ப்பில் மறுசுழற்சி செய்யப்படும்; மண்ணில்லா முறையில் காய்கறி வளர்ப்பு பூங்கா அமைக்கப்படும்.

* தூத்துக்குடி, பொன்னேரி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களில் கூடுதலாக விடுதிகள் ரூ.12 கோடியில் கட்டப்படும்.

* மேட்டூர் அணை, ஆத்தூர் வைகை அணை மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய இடங்களில் ரூ.13.71 கோடி மதிப்பில் நவீன வசதிகள் உருவாக்கப்படும்.

* கடலூர், திருச்சி மணமேல்குடி மற்றும் ராதாபுரம் ஆகிய இடங்களில் புதிய மீன்வளத்துறை அலுவலக கட்டிடங்கள் ரூ.9.85 கோடியில் கட்டப்படும்.

* விசைப்படகுகள் மராமத்து மற்றும் பராமரிப்பு செலவினங்களுக்காக குறுகிய கால கடன்கள் ஏற்பாடு செய்யப்படும்.

* ராமநாதபுரம் - ஆற்றங்கரை மீனவ கிராமத்தில் மீன்களை கையாளும் வசதிகள் ரூ.120 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.

* நாகை - பழையாறு மீன்பிடித் துறைமுகத்தில் படகு பழுது பார்க்கும் தளம், கொடியம்பாளையத்தில் மீன் கையாளும் வசதிகள் ஏற்படுத்தப்படும்.

* பழையாறில் படகு பழுது பார்க்கும் தளம், கொடியம்பாளையத்தில் மீன் கையாளும் வசதிகள் ரூ. 5.90 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.

* ராமநாதபுரம் - ரோஸ் மாநகர், தங்கச்சிமடத்தில் கடல் அரிப்பால் சேதம் அடைந்த மீன் இறங்கு தங்கள் ரூ. 19 கோடியில் மேம்படுத்தப்படும்.

* கன்னியாகுமரி மாவட்டம் மிடாலம் மீனவ கிராமத்தில் மீன் இறங்கு தளம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என பல்வேறு அறிவிப்புகளை மீன்வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: