கொரோனா மீட்பு பணிகளை சுட்டிக்காட்டி ஏர் இந்தியாவிடம் அவசர நிதியுதவி கோரிய விமானிகள்

டெல்லி: கொரோனா மீட்பு பணிகளை சுட்டிக்காட்டி ஏர் இந்தியா நிறுவன விமானிகள், அவசர நிதியுதவி கோரி மத்திய அரசிடம் கடிதம்  அளித்துள்ளனர். சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் பூரிக்கு, விமானிகள் சங்கங்கள் சார்பில் அனுப்பபட்டுள்ள அந்த  கடிதத்தில், கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ள நாடுகளில் சிக்கித்தவித்த இந்தியர்களை மீட்டு வந்த ஏர் இந்தியா நிறுவனத்துக்கும், மீட்பு  பணிகளில் ஈடுபட்ட விமானிகள் உள்ளிட்ட ஊழியர்களுக்கும் பாராட்டுகள் குவிந்தாலும், மத்திய அரசிடமிருந்து எவ்வித நிதியும் ஒதுக்கப்படவில்லை  எனக் கூறப்பட்டுள்ளது.

ஊதியத்துக்கான தங்கள் அடிப்படை உரிமைகள் மீண்டும் மீண்டும் மீறப்படுவதாக வேதனை தெரிவித்துள்ள விமானிகள், ஊதியம் நிறுத்தி வைப்பு  பொருளாதார ரீதியாக தங்களை நெருக்கடிக்கு ஆளாக்குவதாகவும் கூறியுள்ளனர். மேலும் ஏர் இந்தியாவுக்கு அவசர நிதியுதவி அளிக்க கோரிக்கை  விடுத்துள்ள ஊழியர்கள், அது தங்களை தேசத்திற்கு தொடர்ந்து சேவையாற்ற உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories: