பேரவையில் இன்று...

தமிழக சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு கூடியதும், கேள்வி-நேரம் எடுத்துக் கொள்ளப்படும். இதைத்தொடர்ந்து மீன் வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை, கால்நடை துறை ஆகிய மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும். விவாதத்துக்கு பதில் அளித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர், துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.

ஊராட்சி செயலர்களுக்கு அரசு ஊதியம் கிடைக்குமா?

எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்: சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ₹ 20 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுவந்தது. தற்போது அதை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க மீண்டும் அனுமதி அளிக்க வேண்டும். ஊராட்சிகளில் பணியாற்றிவரும் ஊராட்சி செயலர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு நிகரான ஊதியம் வழங்க வேண்டும்.

ஊழியர்கள் 1000 பேருக்கு சேர வேண்டிய 300 கோடி

நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறையின் மானிய கோரிக்கை மீது நடைபெற்ற விவாதத்தில் திமுக ெகாறடா சக்கரபாணி பேசியதாவது: தமிழ்நாடு குடிநீர் வடிகால்  வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற 1000 ஊழியர்களுக்கு சேர வேண்டிய 300 கோடி தற்போது வரை வழங்கப்படாமல் உள்ளது. அதை விரைந்து வழங்க வேண்டும். காலியாக உள்ள மேல்நிலை தீர் தேக்க தொட்டி இயக்குபவர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு நிகரான ஊதியம் வழங்க வேண்டும்.

Related Stories: