கோடை வெயிலை சமாளிக்க ஏற்பாடு கரூரில் டிராபிக் போலீசாருக்கு குளிர்பானம் வழங்கல்

கரூர்: கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் டிராபிக் போலீசாருக்கு குளிர்பானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.கடந்த மூன்று ஆண்டுகளாக டிராபிக் போலீசாருக்கு, கோடையை சமாளிக்கும் வகையில் குளிர்பானம், மோர், இளநீர் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.இதே போன்று நேற்று காலை கரூர் தபால் தந்தி அலுவலகம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்பி பாண்டியராஜன் கலந்து கொண்டு, டிராபிக் போலீசாருக்கு லெமன் ஜூஸ் வழங்கி நிகழ்வினை தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து நான்கு மற்றும் இரண்டு சக்கர வாகனங்களை பாதுகாப்புடன் ஓட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் குறிப்பிடப்பட்டுள்ள துண்டு பிரசுரங்களையும் மாவட்ட எஸ்பி ஆட்டோ மற்றும் கார் டிரைவர்களுக்கு வழங்கி அறிவுரைகள் வழங்கினார்.இந்த நிகழ்வில் டிஎஸ்பி சுகுமார், டிராபிக் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து உட்பட அனைத்து போலீசாரும் கலந்து கொண்டனர்.டிராபிக் போலீசாருக்கு தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு குளிர்பானம், மோர் போன்றவை வழங்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: