சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் சோதனையில்  ஈடுபட்டனர்.சென்னையில் மக்கள் அதிகம் பேர் வந்து செல்லும் இடங்களான விமானநிலையம், எழும்பூர் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம்  உள்ளிட்ட முக்கிய இடங்களில் வெடிகுண்டு வைக்கப் பட்டிருப்பதாக கடந்த 13ம் தேதி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் செல்போனில்  கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். பின்னர் அது புரளி என்பது தெரியவந்தது. இந்நிலையில் நேற்று மறுபடியும் காவல் கட்டுப்பாட்டு  அறைக்கு அதேபோன்று மர்மநபர் ஒருவர் போன் செய்து கும்பகோணம் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது சிறிது நேரத்தில்  வெடிக்கும் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். பின்னர் நடந்த சம்பவம் குறித்து கும்பகோணம் ரயில்வே போலீசாருக்கு தகவல்  கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள முக்கியமான ரயில்நிலையங்களான சென்ட்ரல் ரயில்நிலையத்தில் சோதனை  செய்ய வேண்டும் என்று ரயில்ேவ எஸ்.பி மகேஷ்வரன் உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில் சென்ட்ரல் ரயில்வே இன்ஸ்பெக்டர் சசிகலா  மேற்பார்வையில் ரயில்வே போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் ரயில்நிலையம் முழுவதும் சோதனை செய்தனர். மேலும்  பயணிகள் பலத்த சோதனைக்கு பிறகு ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் சென்ட்ரல் ரயில்நிலையம் முழுவதும் பெரும்பரபரப்பு  ஏற்பட்டது.

Related Stories: