பள்ளத்தூரில் இருந்து விரட்டியடிப்பு; வன பகுதியில் தஞ்சம் புகுந்த 14 யானைகள்: கிருஷ்ணகிரி வனத்துறையினர் தீவிரம்

குடியாத்தம்: பள்ளத்தூரில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட 14 யானைகள் குடியாத்தம் வனபகுதியில் தஞ்சமடைந்துள்ளது. ஆந்திர மாநில வனப்பகுதியிலிருந்து 14 யானைகள் காட்பாடி அடுத்த பனமடங்கி- பள்ளத்தூர் பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்குள் கடந்த 11ம் தேதி புகுந்தது. இந்த யானைகளை வனத்துறையினர் வன பகுதிக்குள் விரட்டி அடித்தனர். இந்நிலையில், இந்த யானைகள் அனைத்தும் குடியாத்தம் அடுத்த அனுப்பு கிராமத்தில் உள்ள விவசாய நிலத்திற்குள் நேற்று முன்தினம் இரவு நுழைய முயற்சி செய்தது.

ரோந்து பணியில் இருந்த வனத்துறையினர் பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் யானையை விவசாய நிலத்திற்குள் நுழைய விடாமல் வன பகுதிக்கு விரட்டி அடித்தனர். மேலும், இந்த யானைகளை முற்றிலும் விரட்டுவதற்காக கிருஷ்ணகிரியிலிருந்து யானை விரட்டும் வனத்துறையினரை வர வைத்துள்ளனர். இவர்கள் 2 குழுக்களாக பிரிந்து யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த யானைகள் எந்தநேரத்திலும் திரும்ப விவசாய நிலத்திற்குள் நுழைய வாய்ப்பு உள்ளதால், பொதுமக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர்.

Related Stories: