திண்டிவனம் அரசு மருத்துவமனையில் ஆட்சியர் திடீர் ஆய்வு

திண்டிவனம்: திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு சிறப்பு பிரிவை கலெக்டர் அண்ணாதுரை நேற்று பார்வையிட்டார். அப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளாத ஊழியர்களை கண்டித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை நேற்று காலை திண்டிவனம் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கொரோனா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு பிரிவு தனி வார்டையும் கலெக்டர் பார்வையிட்டார். அப்போது புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, கண் நோய் சிகிச்சை பிரிவு, சி.டி. ஸ்கேன் பிரிவு போன்ற பல்வேறு வார்டுகளுக்கு சென்று பார்வையிட்டார். நோயாளிகளிடமும் குறைகளை கேட்டறிந்தார்.

ஒரு சில வார்டுகளில் மின்விளக்குகள் இல்லாததையும், போதிய நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளாததையும் கண்ட கலெக்டர், அங்கிருந்த ஊழியர்களை கண்டித்தார். பின்னர் ஆய்வை முடித்துக்கொண்டு புறப்பட்டு சென்றார். கலெக்டர் ஆய்வின் போது திண்டிவனம் சப்-கலெக்டர் அனு, அரசு மருத்துவமனை இணை இயக்குனர் டாக்டர் சண்முகக்கனி, துணை இயக்குனர் செந்தில்குமார், நகராட்சி ஆணையர் பிரகாஷ், வட்டாட்சியர் ராஜேசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: