தமிழகத்தில் கொரோனா இல்லை இல்லை என்று கூறி எம்எல்ஏக்களை காலி செய்ய பார்க்கிறீர்களா? துரைமுருகன் நகைச்சுவை

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கொண்டு வந்த சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் விவாதத்திற்கு பதில் அளித்து பேசும்போது, அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழக மக்கள் தேவையில்லாமல் பயப்பட வேண்டாம், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறினார்.எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன்: வதந்தியை அரசுதான் பரப்புகிறது. வெளிநாட்டில் கொத்து, கொத்தா செத்துக்கொண்டு இருக்கிறார்கள். போப் ஆண்டவர் பிரார்த்தனை கூட்டத்தில் கூட யாரும் இல்லை. வாடிகன் நகர் வெறிச்சோடி இருக்கிறது. ஒவ்வொரு நாடுகளிலும் கொரோனாவால் இறக்கிறார்கள். எனவே ஒன்றும் இல்லை, ஒன்றும் இல்லை என்று எங்களை (எம்எல்ஏக்களை) காலி செய்ய பார்க்கிறீர்களா, இங்கு இருப்பவர்களுக்கு ஏதாவது ஒன்று நடந்து இடைத்தேர்தல் வந்தால் யார் சந்திப்பது, பயத்தால் நாங்கள் கை குட்டையை வாயில் பொத்திக் கொள்கிறோம்.

 நீங்க வேற, கொரோனா இல்லை, இல்லை என்கிறீர்கள். 3 டாக்டர்களை இங்கே பேச விட்டது தவறு. பேரவையில் அதிகமாக ஏ.சி. பயன்படுத்தப்படுகிறது. இங்கு இருப்பவர்கள் தும்மினாலே பயமாக இருக்கிறது. எனவே முதலில் இங்கு உள்ளவர்களுக்கு மாஸ்க் வழங்கி காப்பாற்றுங்கள் . முதல்வர் எடப்பாடி: 70 வயதிற்கு மேலே பாதிப்புக்கு வாய்ப்பு என்று அமைச்சர் கூறினார். அதனால் அண்ணன் (துரைமுருகன்) அச்சப்படுகிறீர்களோ, என்னவோ தெரியவில்லை. அந்த கவலையே வேண்டியதில்லை. .  உங்களுக்கு வயது அதிகமாக இருந்தாலும் கூட, அதற்கும் தகுந்த சிகிச்சை கொடுப்பதற்கு நம்முடைய மருத்துவர்கள் தயாராக இருக்கிறார்கள். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

Related Stories: