பில் தொகையை பாஸ் செய்வதற்கு கான்டிராக்டரிடம் 57ஆயிரம் லஞ்சம் பெண் பொறியாளர் உட்பட 2 பேர் கைது: கணக்கில் வராத 6 லட்சம் பணம் லஞ்ச ஒழிப்புத்துறை பறிமுதல்

சென்னை: ஒப்பந்த நிறைவு பணிக்கான பில் தொகையை பாஸ் செய்வதற்கு 57 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கட்டுமான பெண் பொறியாளர் உட்பட 2 பேரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக கைது ெசய்தனர். அவர்களிடம் இருந்து கணக்கில் வராத ₹6 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.  சென்னை கிண்டியில் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் கட்டுமான பொறியாளராக தேன்மொழி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கட்டுமான பணிக்காக ஒப்பந்ததாரர் ஒருவரிடம் பில் ெதாகையை பாஸ் செய்வதற்கு 57ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அந்த பணத்தை இடைத்தரகராக உள்ள மற்றொரு ஒப்பந்ததாரர் கோபாலகிருஷ்ணன் என்பவரிடம் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் ஒப்பந்த பணி நிறைவுக்கான பில் பாஸ் செய்யமுடியாது என்று கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஒப்பந்ததாரர் கட்டுமான பெண் பொறியாளர் தேன்மொழி பில் பாஸ் செய்வதற்கு 57 ஆயிரம் லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய ₹57 ஆயிரம் பணத்தை புகார் அளித்த ஒப்பந்ததாரரிடம் கொடுத்தனர். அதன்படி ஒப்பந்ததாரர் ேநற்று கிண்டியில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் கட்டுமான பெண் அதிகாரி தேனிமொழி கூறி ஒப்பந்ததாரர் கோபாலகிருஷ்ணனிடம் ரசாயனம் தரவிய ₹57 ஆயிரம் பணத்தை கொடுத்தார்.

பணத்தை பெற்று கொண்ட ஒப்பந்ததாரர் கோபாலகிருஷ்ணன் நேராக கட்டுமான பெண் பொறியாளர் தேன்மொழி அறைக்கு சென்று பணத்தை கொடுக்கும் போது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக கட்டுமான பெண் பொறியாளர் தேன்மொழி மற்றும் இடைத்தரகராக செயல்பட்ட ஒப்பந்ததாரர் கோபாலகிருஷ்ணனையும் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் ஒப்பந்ததாரர் கோபாலகிருஷ்ணனிடம் இருந்து கணக்கில் வராத ₹5 லட்சத்து 92 ஆயிரம் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.  இந்த சம்பவத்தால் சிறிது நேரம் சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: