தெற்கு ஆசியாவிலேயே நாட்டினக் கால்நடைகளை காப்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

சென்னை: தெற்கு ஆசியாவிலேயே நாட்டினக் கால்நடைகளை காப்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பெருமிதம் தெரிவித்துள்ளார். கால்நடை பராமரிப்பு, வேளாண்மையில் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருப்பது மட்டுமன்றி மூன்றில் இரண்டு பங்கு கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்திற்கும் ஆதாரமாயுள்ளது. மேலும் கிராமப்புற பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பதுடன் அதிக எண்ணிக்கையிலான சிறிய, நடுத்தர விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு பயனள்ள வேலை வாய்ப்பு வழங்குவதன் மூலம், அவர்கள் பொருளாதார நிலையை மேம்படுத்தும் துறையாகவும் விளங்குகிறது. கால்நடைகள், நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கு, குடும்ப தொழிலுக்கு அடுத்து, முக்கியமான வருவாய் மூலமாக இருப்பதுடன், அவர்களுக்கு ஒரே பெரிய சொத்தாகவும் விளங்குகிறது.

இந்நிலையில் பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. கருணாஸ், தமிழகத்தில் நாட்டு மாடுகள் அழியும் சூழல் நிலவுவதாக குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்து பேசிய கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், நாட்டினங்களை அதிகப்படுத்துவதன் நோக்கத்தில் தலைவாசலில் கால்நடை பூங்கா அமைக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும்  நாட்டின கால்நடைகளை அதிகப்படுத்தும் நோக்கத்தில் 20 கோடி ரூபாய் செலவில் மாவட்ட வாரியாக ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், நாட்டு மாடுகளை அதிகப்படுத்துவதே முதலமைச்சரின் நோக்கம் என தெரிவித்தார்.

Related Stories: