மார்ச் 21,22- ல் நடக்கவிருந்த ஆசிய லெவன் - உலக லெவன் போட்டிகள் ஒத்திவைப்பு: வங்கதேச கிரிக்கெட் போர்டு அறிவிப்பு

வங்கதேசம்: வங்கதேசத்தின் மறைந்த அரசியல் வாதி ஷேக் முஜிர் ரஹ்மானின் 100ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வரும் 21 மற்றும் 22 மார்ச் 2020 தேதிகளில் உலக லெவன், ஆசிய லெவன் அணிகள் மோதும் போட்டியை வங்கதேச கிரிக்கெட் போர்டு நடத்த முடிவு செய்தது. இந்த போட்டிகளில் ஐந்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஆசிய லெவன் சார்பில் பங்கேற்பதாக இருந்தது.

வங்கதேசத்தில் ஆசிய லெவன் - உலக லெவன் இடையே மார்ச் 21,22- ல் நடக்கவிருந்த போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆசிய லெவன் - உலக லெவன் இடையேயான போட்டிகளை ஒத்திவைத்து வங்கதேச கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ளது. இரண்டு டி-20 போட்டிகள் கொண்ட தொடரை வங்கதேச கிரிக்கெட் போர்டு சார்பில் நடத்த வேண்டிய ஒரு போட்டியை பிசிசிஐ சார்பில் உலகின் மிகப்பெரிய மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து வங்கதேச கிரிக்கெட் போர்டு தலைவர் நிஜாமுதின் சவுத்ரி கூறுகையில், இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியை பிசிசிஐ நடத்தயிருந்தது. ஆனால் மைதானம் தயாராகாத காரணத்தால் தற்போது இரு போட்டிகளுமே வங்கதேசத்தில் நடக்கவுள்ளது என கூறினார். சீனாவில் பரவத் தொடங்கிய கோவிட்-19 வைரஸ் உலகின் 123 நாடுகளில் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக உலக லெவன், ஆசிய லெவன் அணிகள் மோதும் போட்டியை வங்கதேச கிரிக்கெட் போர்டு ஒத்திவைத்து அறிவித்துள்ளது.

Related Stories: