×

இமயமலையில் அதிசயம்!!!

நன்றி குங்குமம் முத்தாரம்

இமயமலையிலும் அதைச் சுற்றியும் நடக்கும் நிகழ்வுகளை  நாசாவின் செயற்கைக் கோள் நுணுக்கமாக கண்காணித்துப் புகைப்படமாக்கி வருகிறது. அப்படி கடந்த 25 ஆண்டுகளாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்துள்ளனர். பல இடங்களில் பனி உருகி ஆறாக ஓடுகிறது. பருவ நிலை மாற்றத்தால் பல பனிப்பிரதேசங்கள் இப்படித்தானே ஆகிவிட்டன என்று நீங்கள் கேட்பது சரிதான். ஆனால், இமயமலையின் சில இடங்களில் தாவரங்கள் முளைவிட்டுள்ளன. இதுவும் நாசாவின் செயற்கைக்கோளில் பதிவானதுதான் விஷயம்.

பொதுவாக கடல் மட்டத்திலிருந்து 6 ஆயிரம் அடி உயரத்துக்கு மேல் செடி கொடிகள் வளராது என்பது அறிவியலின் அசைக்க முடியாத உண்மை. தவிர,  அடர் பனியிலும் தாவரங்கள் வளராது. இந்நிலையில்தான் இமய மலையில் செடிகள் வளர்ந்துள்ளன. அங்கே தாவரங்கள் வளர்வதற்கு ஏற்ப தட்ப வெப்பநிலையில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பது உள்ளிட்ட பல புதிய ஆய்வுகளுக்கு இந்தச் சம்பவம் வித்திட்டுள்ளது.

தொகுப்பு: க.கதிரவன்

Tags : Himalayas , NASA's satellite is closely monitoring and photographing events in and around the Himalayas.
× RELATED உலகின் உயரமான போர்க்களம் சியாச்சின்...