×

உலகின் உயரமான போர்க்களம் சியாச்சின் மீட்கப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவு: ராணுவம் பெருமிதம்

புதுடெல்லி: உலகின் உயரமான போர்க்களமான சியாச்சின் பனிமலைகள் இந்திய ராணுவத்தால் மீட்கப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இமயமலையின் காரகோரம் மலைத்தொடரில் சுமார் 20,000 அடி உயரத்தில் உள்ள சியாச்சின் பனி மலைப் பகுதியை கைப்பற்ற இந்தியா, பாகிஸ்தான் ராணுவங்கள் கடந்த 1980களில் அதிக ஆர்வம் காட்டின. இதற்காக இந்திய ராணுவம் மேகதூத் ஆபரேஷனை முன்னெடுத்தது. சியாச்சின் பனிப்பாறைகள் வெறும் உயரமானவை மட்டுமல்ல, அங்கு மனிதர்கள் சுவாசிப்பதும், தங்கியிருப்பதுமே மிகவும் சவாலான காரியம்.

அப்படிப்பட்ட கடினமான பகுதியை கைப்பற்றி பாதுகாக்க 1984ம் ஆண்டு ஆபரேஷன் மேகதூத் செயல்படுத்தப்பட்டது. இதில் இந்திய ராணுவம் மிகச்சிறப்பாக, மிக விரைவாக செயல்பட்டு 1984ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி சியாச்சினை முழுமையாக கைப்பற்றியது இந்தியா வசமாக்கியது. அங்கு இந்திய ராணுவ வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டு தற்போது 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

இப்பகுதியில் போரால் இறந்த வீரர்களை விட பனியால் வீரமரணமடைந்த வீரர்களே அதிகம். தற்போது சியாச்சினில் ராணுவ கட்டமைப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, வீரர்களின் பாதுகாப்பிற்கு தேவையான பல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் ராணுவம் கவனம் செலுத்தி வருகிறது. ஒவ்வொரு வீரர்களுக்கும் கையடக்க வானிலை கண்காணிப்பு கருவி வழங்கப்பட்டுள்ளன. அவை சரியான நேரத்தில் வானிலை புதுப்பிப்புகளை வழங்குகின்றன மற்றும் சாத்தியமான பனிச்சரிவுகள் பற்றி எச்சரிக்கின்றன.

The post உலகின் உயரமான போர்க்களம் சியாச்சின் மீட்கப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவு: ராணுவம் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Xiachin ,Pride ,New Delhi ,Indian Army ,India ,Pakistan ,Siachin ,Karakoram ,Himalayas ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு