கொரோனாவை எப்படி கட்டுப்படுத்துவது?: நெல்லை சாரா டக்கர் பள்ளியில் மாணவிகளுக்கு செயல்முறை விளக்கம்

நெல்லை: கொரோனாவைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தலின் பேரில் நெல்லை பாளையங்கோட்டை சாரா டக்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்  செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. சீனாவில் தொடங்கி உலகை அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து  வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை மற்றும் கல்விப்பள்ளித்துறை இணைந்து மாணவ, மாணவிகளுக்கு  செயல்முறை விளக்கம் கற்றுக்கொடுக்கும்படி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

அதன்படி, கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள திருநெல்வேலி மாவட்டம் சாரா டக்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று  செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. அப்போது கிருமினாசி கொண்டு கைகளை அடிக்கடி கழுவுதல், முக கவசம் அணியுதல் உள்ளிட்டவை குறித்து  பள்ளி ஆசிரியர்கள் மாணவிகளுக்கு செயல்முறை விளக்கம் மூலம் கற்றுக்கொடுத்தனர். மேலும், ஆரோக்கியமான உணவு உண்ண வேண்டும் என்றும் இவற்றை  குடும்ப உறுப்பினர்களுக்கு எடுத்துரைக்குமாறு ஆசிரியர்கள் மாணவிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Stories: