தேனி ஆவின் தலைவராக ஓபிஎஸ் தம்பி தேர்வு

தேனி:  தேனி ஆவின் நிர்வாகக்குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல்  நேற்று நடந்தது. இதில் தலைவர் பதவிக்கு ஓ.ராஜாவும், துணைத்தலைவர் பதவிக்கு முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் செல்லமுத்துவும் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனால் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக ஓ.ராஜா பதவியேற்றதும், கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்கள் தங்களது வளர்ப்பு கறவை மாடுகளுக்கு கலப்பு தீவனம் வாங்க கிலோ ஒன்றுக்கு 3 மானியம் வழங்கப்படும் என அறிவித்தார்.

Related Stories: