சத்தியமங்கலம்: பவானிசாகரில் உள்ள பொதுப்பணித்துறை விடுதியின் சுற்றுச்சுவரை காட்டு யானைகள் இடித்து சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள விளாமுண்டி வனப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. நேற்று முன்தினம் விளாமுண்டி வனப்பகுதியை விட்டு வெளியேறிய 4 காட்டு யானைகள் பவானிசாகர் நகர்ப்பகுதிக்குள் புகுந்தன. அங்குள்ள அரசு அலுவலர் குடியிருப்பு பகுதிக்கு சென்ற யானைகள் சாமிக்கண்ணு என்பவரது வீட்டுத்தோட்டத்தில் இருந்த வாழை மரங்களை தின்றது.