தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும்: மாதர் இயக்கங்களின் கூட்டுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

நாகர்கோவில்: தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என நாகர்கோவிலில் நடந்த மாதர் இயக்கங்களின் கூட்டுக்குழு பொதுக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. குமரி மாவட்ட மாதர் இயக்கங்களின் கூட்டுக்குழு சார்பில் உலக பெண்கள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி பேரணி நடந்தது. வெட்டூர்ணிமடம் ஜங்சனில் இருந்து ெதாடங்கிய பேரணிக்கு ஷீபாகுமாரி தலைமை வகித்தார். பேரணியை ஆசிரியை செலின்மேரி தொடங்கி வைத்தார். பேரணி கிருஷ்ணன்கோவில் வழியாக வடசேரி வஞ்சியாதித்தன் புதுத்தெருவில் முடிந்தது. பின்னர் அங்கு பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சுஜா ஜாஸ்பின் தலைமை வகித்தார். ஜெபா வரவேற்றார்.

கூட்டுக்குழு தலைவர் உஷா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக அகில இந்திய ஜனநாய மாதர் சங்க துணைத்தலைவர் வாசுகி கலந்து கொண்டு பேசினார்.  பொதுக்கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை தவிர்க்க வேண்டும். புதிய கல்வி கொள்கையை கைவிட வேண்டும். கடற்கரை மேலாண்மை மசோதாவை திரும்பப்பெற வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

நுண்நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்த வேண்டும். சூழலியல் அதிர்வு தாங்கு மண்டல திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிப்ெபற்ற பெண் தலைவர்கள் பாராட்டப்பட்டனர். மேலும் அவர்களை பாராட்டி நிர்வாகி றோஸ்லெட் பேசினார். கூட்டத்தில நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர். மாதர் இயங்கங்களின்  கூட்டுக்குழு செயலாளர் ஆக்னஸ் குளோறி நன்றி கூறினார்.

Related Stories: