வடகிழக்கு வருமான வரித்துறையின் பெண் அதிகாரிகள் முயற்சியில் ரூ.8 ஆயிரம் கோடி வரி வசூல்

தின்சுகியா: வருமான வரித் துறையின் வடகிழக்கு மண்டல முதன்மை இயக்குனர் சஞ்சய் பாதுர் அளித்த பேட்டியில் கூறியதாவது: வருமான வரி செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், சமூக இணையதளங்களில் பிரசாரங்கள், தெரு நாடகங்கள், வினாடி வினா போட்டிகள் ஆகியவற்றை வடகிழக்கு மண்டலத்தில் வருமான வரித்துறை அறிமுகம் செய்தது. இது வருமான வரித் துறையின் வழக்கத்துக்கு மாறான நடைமுறை. இதில் பெண் அதிகாரிகளின் அமைதியான பங்களிப்பு மிகவும் முக்கியமானது.

பொருளாதாரம், நிதி நிலவரம், சட்டம், மனித உளவியல் ஆகியவற்றை புரிந்து கொண்டு சவாலான பணியில் பெண் அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்த குழுவுக்கு  முதன்மை தலைமை ஆணையர் கவிதா ஜா தலைமை தாங்கினார். இந்த குழுவில் ஐஆர்எஸ் பெண் அதிகாரிகள் லோங்வா, பிரியங்கா சர்மா பன்சால் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இவர்களுக்கு ஜூனியர் பெண் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உதவியாக செயல்பட்டனர். இவர்கள் அனைவரும் இணைந்து வடகிழக்கு மண்டலத்தில், வரி நிர்வாக செயல்பாட்டை முற்றிலும் மாற்றினார். இவர்களின் அணுகுமுறையால் வடகிழக்கு மண்டலத்தில் கடந்த நிதியாண்டில் ₹8 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டப்பட்டது.

Related Stories: