சர்வதேச மகளிர் தினம்: குடியரசு தலைவர், பிரதமர் நரேந்திர மோடிஉள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

டெல்லி: சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப் படுகிறது. ஆணாதிக்க சமூகத்தில் இருந்து பெண்களுக்கான சுதந்திரத்தை, உரிமையை வென்றெடுத்த நாள் என்று கூட இந்த நாளை சொல்லலாம். இந்த நாள் கூட அவ்வளவு எளிதில் கிடைத்துவிட வில்லை. பல நாடுகளில் பல்வேறு காலக்கட்டங்களில் நடைபெற்ற போராட்டங்களின் விளைவாகவெ இன்று பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகின் ஆக்கும் சக்தியான பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நோக்கில் உலக மகளிர் தினம் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. பாலின சமத்துவம் என்பது அடிப்படை உரிமை மட்டுமல்ல, அது சமூக நீதி. இன்று சர்வதேச மகளிர் தினம். இது கொண்டாட்டமாக கட்டமைக்கப்படுகிறது அனால் இது கொண்டாடப்படுவதற்காக உருவாக்கப்பட்ட நாள் அல்ல, ஒரு போராட்டத்திற்கான, புரட்சிக்கான விதை விதைக்கப்பட்ட நாள் இன்று. இந்நிலையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் மற்றும் நடிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் தங்கள் அர்ப்பணிப்பு, விடாமுயற்சி, தியாகம் ஆகியவற்றால் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்திய தனித்துவமிக்க சாதனைப் பெண்களை வாழ்த்துவதே மகளிர் தினமாகும். இந்த நேரத்தில் பெண்களின் பாதுகாப்பையும், அவர்களுக்கு அளிக்கும் மரியாதையையும் மீண்டும் உறுதிப்படுத்த உறுதி ஏற்போம். இதன்மூலமே அவர்கள் தங்கள் இலக்கினை நம்பிக்கையுடனும், உத்வேகத்துடனும் தடையின்றி அடைய முடியும் என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். தமது ட்விட்டர் வலைத்தளத்தை 7 பெண் சாதனையாளர்கள் இன்று பயன்படுத்திக் கொள்வார்கள் என்று மோடி தெரிவித்துள்ளார். பெண் சாதனையாளர்கள் தங்கள் வாழ்க்கை பயணத்தை ட்விட்டர் பக்கத்தில் நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொள்வார்கள் என்று மோடி தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன்

மகளிர் தினத்தை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். பெண்களுக்கு பாதுகாப்பும் சம உரிமையும் என்ற முழக்கத்தோடு பாரபட்சமின்றி வாய்ப்புகள் வழங்கவேண்டும் என கமல் தெரிவித்துள்ளார்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

தடைகளை தகர்த்து தவிடு பொடியாக்கி, சாதனைகளாக தடம் பதிக்க அனைத்து மகளிரையும் வாழ்த்துகிறேன். அனைத்து மகளிர்களுக்கும் எனது இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் என தேரிவித்துள்ளார்.

Related Stories: