டெல்லி கலவர பிரச்சனையில் இருந்து கவனத்தை திசைதிருப்பவே கொரோனா வைரஸ் பீதியை மத்திய பாஜக அரசு கிளப்பி வருகிறது; மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

டெல்லி கலவர பிரச்சனையில் இருந்து கவனத்தை திசைதிருப்பவே கொரோனா வைரஸ் குறித்து பேசுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். சீனாவின் ஹூபெய் மாகாணம், வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 70 நாடுகளில் இந்த வைரஸ் பாதித்துள்ளது. சீனாவில் மட்டும் கொரோனா வைரசுக்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 90 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்கொரியா, ஈரான், உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தாக்குதல் அதிகரித்து வருகிறது.

தென்கொரியாவில் கொரோனா பாதிப்பு 5,328 பேருக்கும், இத்தாலியில் 2,502 பேருக்கும் பரவியுள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 9 பேரும், ஈரானில் 77 பேர் பெரும் உயிரிழந்துள்ளனர். இது, இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் இதுவரை 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இன்று தெரிவித்தார். நேற்றுவரை கொரோனா பாதிப்பு வெறும் 6 ஆக இருந்த நிலையில், தற்போது 28 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் தெற்கு தினஜ்பூர் மாவட்டத்தின் புனியாத்பூரில் நடைபெற்ற பேரணியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்; டெல்லி கலவர பிரச்சனையில் இருந்து கவனத்தை திசைதிருப்பவே கொரோனா வைரஸ் குறித்து பேசுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். டெல்லி கலவரத்தால் தான் மக்கள் உயிரிழந்தனர்; கொரோனா வைரஸால் யாரும் இறக்கவில்லை. டெல்லி கலவரம் குறித்து எந்த ஊடகமும் தற்போது பேசுவதில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளார். கொரோனா, கொரோனா என அதிகமாக கத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அதுஒரு பயங்கரமான நோய்தான், ஆனால், அதுகுறித்து பீதியை கிளப்ப வேண்டாம் என கூறினார். மேலும் பேசிய அவர்; தற்போது இறப்பவர்கள் கூட இப்படியொரு பயங்கரமான வைரஸால் இறக்கிறார்கள் என்பது தெரிகிறது. ஆனால், ஆரோக்கியமான மக்கள் கருணையின்றி டெல்லியில் கொல்லப்பட்டார்கள் என்பது வேதனை அளிக்கிறது. பாஜக அரசு இதுவரை மன்னிப்பு கூட கேட்கவில்லை. அவர்கள் கோலி மாரோ என்று சொல்கிறார்கள். மேற்குவங்கமும், உத்தரப் பிரதேசமும் ஒன்று அல்ல என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: