நகை வாங்குவோரை கலக்கத்தில் வைத்திருக்கும் தங்கம் விலை; சவரனுக்கு ரூ.72 உயர்ந்து சவரன் ரூ.32,112-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 உயர்ந்து சவரன் ரூ.32,112-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.9 உயர்ந்து ரூ4.014-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 10 காசுகள் குறைந்து ரூ.48,50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் விலை ஏற்றம் என்ற அளவில் தங்கம் விலை உயர்ந்து வருவது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை அதிகரித்து வருகிறது. சொல்லப்போனால் தினந்தோறும் தங்கம் விலை அதிகரித்து புதிய சாதனையை படைத்து வந்தது.

அதாவது, கடந்த 17ம் தேதி ஒரு சவரன் 31,216க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து 18ம் தேதி 31,408, 19ம் தேதி 31,720, 20ம் தேதி 31,824க்கும், 21ம் தேதி 32,408, 22ம் தேதி 32,576க்கும் விற்பனையானது. 24ம் தேதி தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. அதாவது, கிராம் 4,166க்கும், சவரன் 33,328க்கும் விற்கப்பட்டது. அதன் பிறகு தங்கம் விலை சற்று குறைந்து வருகிறது.

25ம் தேதி ஒரு சவரன் 32,736, 26ம் தேதி 32,640, 27ம் தேதி 32,512க்கும் விற்பனையானது. 28ம் தேதி ஒரு கிராம் தங்கம் 4064க்கும், சவரன் 32,512க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தங்கம் விலை அதிரடியாக குறைந்தது.

அதாவது, கிராமுக்கு 78 குறைந்து ஒரு கிராம் 3,986க்கும், சவரனுக்கு 624 குறைந்து ஒரு சவரன் 31,888க்கும் விற்கப்பட்டது.

இந்த விலை குறைவு நகை வாங்குவோரை சற்று சந்தோஷத்தில் ஆழ்த்தியது. தொடர்ச்சியாக கடந்த சில நாட்களில் மட்டும் சவரன் 848 அளவுக்கு குறைந்தது. தொடர்ந்து சரிந்து வந்ததால், நேற்று விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.31.984க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.32,112-க்கு விற்பனையாகிறது. இதனால், நகை வாங்குவோர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: