சிஏஏ ஆதரவு பேரணிக்கு வந்த அமித் ஷாவுக்கு எதிராக கருப்பு பலூன்: மேற்குவங்கத்தில் பரபரப்பு

கொல்கத்தா: சிஏஏ ஆதரவு பேரணிக்காக கொல்கத்தா வந்த அமித் ஷாவுக்கு எதிராக கருப்பு பலூன் பறக்கவிடப்பட்டதால், மேற்குவங்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் நட்டா ஆகியோர் வருகைக்கு எதிராக கொல்கத்தாவில் இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் பல்வேறு இயக்கங்கள் போராட்டங்களை நடத்தின. பாஜக சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக ஷாஹித் மினார் மைதானத்தில் ெதாடங்கும் பேரணிக்கு முன்னதாக, இடதுசாரி மாணவர் அமைப்பு சார்பில், அமித் ஷாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

சிபிஐ (எம்) சட்டமன்ற உறுப்பினர் சுஜன் சக்ரவர்த்தி, ஜாதவ்பூர் பகுதியில் நடந்த எதிர்ப்பு பேரணிக்கு தலைமை வகித்தார். மேலும் இடதுசாரி குழு ஒன்று கொல்கத்தாவின் வடக்கு புறநகரில் உள்ள நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே கூடி, அமித் ஷாவுக்கு எதிராக கருப்பு கொடிகளையும், பலூன்களையும் காட்டி பறக்கவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் ‘கோபேக் அமித்ஷா’  பேனர்களுடன் போராட்டத்தில் பங்கேற்றனர். வரும், ஏப்ரல்-மே மாதங்களில் மேற்குவங்கத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அமித் ஷாவின் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

இக்கட்சி மேற்கு வங்கத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. மொத்தமுள்ள 42 மக்களவை தொகுதிகளில் கடந்த தேர்தலில் 18 இடங்களைப் பிடித்தது; அதே திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 22 இடங்களை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: