பீகார் காவல் நிலையத்தில் பிரசாந்த் கிஷோர் மீது வழக்குப்பதிவு

பாட்னா: அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்து பிரபலமானவர் பிரசாந்த் கிஷோர். கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜ வெற்றி பெற்று பிரதமராக மோடி அரியணை ஏற காரணமாக இருந்தவர்.  பாஜவில் இருந்த அவர், பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்தில் சேர்ந்தார். சமீபத்தில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக முதல்வர் நிதிஷ்குமாருடன் ஏற்பட்ட மோதலையடுத்து அக்கட்சியில் இருந்து கிஷோர் நீக்கப்பட்டார்.   

இவர் மீது பீகாரை சேர்ந்த சஷ்வந்த் கவுதம் என்பவர் மோசடி செய்ததாக பாட்னா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், `மற்றொருவரின் தேர்தல் பிரசார திட்டங்களை கிஷோர் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டுள்ளார் என  குறிப்பிட்டுள்ளார்.  இதையடுத்து பாட்னா போலீசார் பிரசாந்த் கிஷோர்  மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: