தொழில்முனைவோர்களுக்கு மின்னணு முறையில் சந்தைப்படுத்துதல் குறித்து பயிற்சி: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தொழில் முனைவோர்களுக்கு மின்னணு முறையில் சந்தைப்படுத்துதல் குறித்து பயிற்சி வகுப்புகள் நாளை நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (தமிழ்நாடு அரசின் தன்னாட்சி நிறுவனம்) சிட்கோ தொழிற்பேட்டையில் இயங்கி வரு கிறது. தொழில் முனைவோர்களுக்காக மின்னணு முறையில் சந்தைப்படுத்துதல்  குறித்து பயிற்சி, ஈக்காட்டுத்தாங்கல், பார்த்தசாரதி கோயில் தெருவில் அமைந்துள்ள தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் நாளை (28ம் தேதி) காலை 10 மணி முதல் 5 மணி நடக்கிறது. இப்பயிற்சி முகாமில்  கலந்துகொள்வதால் தற்பொழுது செயல்பாட்டிலுள்ள அனைத்து மின்னணு முறையில் சந்தைப்படுத்துதல் பற்றியும் அவைகளை தொழிலில் எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

இந்த பயிற்சியில் சேர விரும்பும் 18 வயது நிரம்பிய 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண், பெண் இருபாலரும் சேரலாம். இப்பயிற்சியில் சேர விரும்புவோர் தங்கள் பெயரை நேரிலோ அல்லது தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும்  புத்தாக்க நிறுவனத்தின் இணைதளம் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.  பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் அலுவலகத்தை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொண்டு  தொலைபேசி  மற்றும் செல்போன் எண்களை முன் பதிவு செய்து கொள்வது அவசியம். தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை - 600 032. 86681 02600, 86681 00336  www.editn.in.  இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: