தமிழகத்தில் பொருளாதார குற்றப்பிரிவுக்கு 21 எஸ்ஐ உட்பட 128 பேர் நியமனம்: டிஜிபி திரிபாதி உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் காவல் துறையில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வந்த 21 உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள் என 128 பேரை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றி டிஜிபி திரிபாதி  உத்தரவிட்டுள்ளார். தமிழக காவல் துறையில் பொருளாதார குற்றப்பிரிவில் தற்போது அதிகளவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஆனால், பொருளாதார குற்றப்பிரிவில் அதிக காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன. இதனால் வழக்குகள்  விசாரணை நடத்தப்படாமல் புகார் நிலையிலேயே இருந்தது.

இதுகுறித்து நீதிமன்ற கவனத்திற்கு வந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களின் பட்டியலை மாவட்ட வாரியாக டிஜிபி திரிபாதி அறிக்கையாக கேட்டார். அதன்படி மாவட்ட  வாரியாக காலிப் பணியிடங்கள் குறித்து அதிகாரிகள் அறிக்கை அளித்தனர்.அதைதொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள சென்னை மாநகர காவல் துறை, காஞ்சிபுரம் மாவட்டம் என அனைத்து மாவட்டங்களில் பணியாற்றிய 21 உதவி  ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர் என 128 பேரை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: