முதல்வர் பழனிசாமிக்கும் சேர்த்துத்தான் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராக போராடுகிறோம்: மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: முதல்வர் பழனிசாமிக்கும் சேர்த்துத்தான் சிஏஏ,  என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராக போராடுகிறோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்தார். தமிழகத்திலேயே லஞ்சம், ஊழலில் முதன்மையாக இருப்பவர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிதான் எனவும் கூறினார். சிஏஏவை அதிமுக எம்.பி.க்கள் எதிர்த்திருந்தால் நாடுமுழுவதும் போராட்டங்கள் வன்முறைகள் நடந்திருக்காது என ஸ்டாலின் கூறினார். வேலூர் மாவட்டம் சோளிங்கரில் திமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், குடியுரிமை சட்டத் திருத்தத்தால் நாட்டில் உள்ள 60 விழுக்காட்டுக்கு மேலான மக்கள், சந்தேக பட்டியலில் இருக்க வேண்டிய சூழல் வரும்.

டெல்லி கலவரத்தை சுட்டிக்காட்டி பேசிய ஸ்டாலின், தற்போது வரை கலவரம் நடக்க காரணம் அதிமுக தான். மேலும் CAA-வை அதிமுக மற்றும் இவர்களுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகள், பாஜகவுக்கு ஆதரவு கொடுத்துள்ள கட்சிகள் தவிர ஏனைய அனைத்து கட்சிகளும், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களும் சட்டத்தை எதிர்த்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய வருகையின் போது டெல்லியில் நடைபெற்ற கலவரம் மத்திய மாநில அரசுகள் தவறான குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவு அளித்ததன் விளைவு தான் எனவும் தெரிவித்துள்ளார்.

எடப்பாடியும், ஓ.பி.எஸ்ஸும் சிறைக்கு செல்வது உறுதி

தொடர்ந்து பேசிய அவர்; ஜெயலலிதா மறைவில் மர்மம் இருப்பதாக கூறிய ஓ.பி.எஸ், 40 நிமிடங்கள் ஜெயலலிதாவின் சமாதியில் ஆவியோடு பேசினார். ஓ.பி.எஸ், ஒரு விசாரணைக் கமிஷன் அமைத்து 3 மாதங்களில் அறிக்கை கேட்ட நிலையில் 3 வருடங்களாகியும் காலத்தை மட்டுமே நீட்டித்துகொண்டிருக்கின்றனர். ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் முடிவுகள் வெளிவந்தால் எடப்பாடியும், ஓ.பி.எஸ்ஸும் கம்பிதான் எண்ணுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: