கொள்ளிடம் கதவணையின் 35% கட்டுமான பணிகள் நிறைவு: 2021ம் ஆண்டுக்குள் கட்டுமான பணிகள் நிறைவடையும்: முதல்வர் பழனிசாமி நேரில் ஆய்வு

திருச்சி: காவிரி ஆற்றின் குறுக்கே முக்கொம்பில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணிகளை முதல்வர் பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். 2018-ல் ஏற்பட்ட வெள்ளத்தால் முக்கொம்பு அணையின் மதகுகள் உடைத்து விழுந்தன குறிப்பிடத்தக்கது. முக்கொம்பு கட்டுமானப்பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:  ஏற்கனவே கொள்ளிடம் கதவனை மதகுகள் இழந்து உடைந்த காரணத்தினால் அதற்கு மாற்றாக புதிய கதவனை கட்டப்படும் என்ற அறிவிக்கப்பட்டு,  சுமார் 387.60 கோடி ரூபாயில் இந்த திட்டம் துவங்கப்பட்டு துரிதமாக கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது, இதுவரை 35 சதவீத பணிகள் நிறைவுப்பெற்றன.  எஞ்சிய பணிகள் அடுத்த ஆண்டு 2021 ஜனவரி இறுதிக்குள் முக்கொம்பு கட்டுமானப்பணி நிறைவடையும். மொத்தமுள்ள 1650 மீட்டர் நீளமுள்ள அடித்தள சுவற்றில் 711 மீட்டர் நீளமுள்ள அடித்தள சுவர் முடிக்கப்பட்டன. மொத்தமுள்ள 1532  மீட்டர்  நீளமுள்ள குறுக்கு வெட்டு சுவரில் 500 மீட்டர்  குறுக்கு வெட்டு நீளமுள்ள சுவரில் முடிக்கப்பட்டன. கட்டுமானப்பணி விரைவில் முடிக்க வேலைபாடுகள் செய்யப்பட்டு வருகிறது என கூறினார்.

Advertising
Advertising

மேலும் அவர் கூறியதாவது: தமிழகத்துக்கு வரும் காவிரியை தடுக்கவோ, திருப்பி அனுப்பவோ கூடாது எனவும் கூறினார்.  இதனையடுத்து அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகு மீத்தேன் எடுக்கக்கூடிய பகுதி என்று ஆய்வு செய்து அதிகாரிகள் இடத்திலேயே கேட்டபோது தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை ஆகியன மீத்தேன் எடுக்கக்கூடிய பகுதியாகும். அதனால் அதை மட்டும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. வேளாண் துறையில் மாநில அரசுக்கு இருக்கின்ற அதிகாரத்தை பயன்படுத்தி வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. மேலும் திருச்சி, அரியலூர், கரூர்  போன்ற மாவட்டங்களில் நிறைய தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டால் இந்த நிறுவனங்களை செயல்படுத்த முடியாது. ஆகவே இதில் எந்த மாவட்டங்கள் பாதிக்கப்பட்டதோ அந்த மாவட்டங்களை ஆய்வின் மூலமாக குறிப்பிட்ட பகுதிகளை வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் நாங்கள் ஏற்கனவே தெளிவுப்படுத்தி விட்டோம். கடந்த 2010-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது என்.பி.ஆர் சட்டத்தை நடைமுறை படுத்தினார்கள். அதில் தற்போது கூடுதலாக 3 அம்சங்களாக மொழி, பெற்றோர்கள் பிறந்த இடம் மற்றும் ஆதார் இணைப்பு என மத்திய அரசு சேர்த்து இருக்கிறது. இவை அனைத்தும் கட்டாயம் கிடையாது, எந்த ஆதாரமும் சமர்ப்பிக்கப்பட வேண்டியதில்லை என்று தெளிவுப்படுத்தி விட்டனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: