தாய்லாந்தை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்

பெர்த்: ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடரின் பி பிரிவு லீக் ஆட்டத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தாய்லாந்து அணியை வீழ்த்தியது. வாகா மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த தாய்லாந்து 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 78 ரன் எடுத்தது. நன்னாபத் கொஞ்சரோயன்கி 33, நருமோல் சாய்வாய் 13 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் வெளியேறினர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ஸ்டெபானி டெய்லர் 3 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 16.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 80 ரன் எடுத்து வென்றது. ஹேலி மேத்யூஸ் 16, லீ ஆன் கிர்பி 3, தியாந்த்ரா டோட்டின் 2 ரன்னில் பெவிலியன் திரும்பினர். சிறப்பாக விளையாடிய கேப்டன் ஸ்டெபானி டெய்லர் 26 ரன், ஷெமைன் கேம்ப்பெல் 25 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் 2 புள்ளிகள் பெற்றது. ஆல் ரவுண்டராக அசத்திய ஸ்டெபானி டெய்லர் சிறந்த வீராங்கனை விருது பெற்றார்.

Related Stories: