அனல் பறக்கும் நியூசி பந்து வீச்சு; அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்திய அணி

வெலிங்டன்: நியூசிலாந்து - இந்தியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளித்தது. பிரித்வி ஷா 16, புஜாரா 11, கேப்டன் கோலி 7 ரன்களில் நடையை கட்டினர். ஓரளவுக்கு தாக்குப்பிடித்த அகர்வால் 34 ரன்களிலும், விஹாரி 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்திய அணி 43 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் எடுத்து திணறி வருகிறது. ரஹானே 33 ரன்களில் விளையாடி வருகிறார். நியூசிலாந்து பந்து வீச்சில் ஜேமிசன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Related Stories: