அவினாசி அருகே கேரள பேருந்து விபத்துக்குள்ளானது குறித்து விசாரணை நடத்தப்படும்: கேரள முதல்வர் பினராயி விஜயன்

அவினாசி: திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில், பெங்களூரில் இருந்து  திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த கேரள மாநில அரசு சொகுசு பேருந்தும், கோவையிலிருந்து சேலம் நோக்கி டைல்ஸ் கற்கள் ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து முற்றிலும் சிதைந்தது. பேருந்தில் இருந்த பயணிகள் இடிபாடுகளில் சிக்கி உடல் உறுப்புகளை இழந்த நிலையில் ரத்தவெள்ளத்தில் துடித்தனர். விபத்துகுறித்து அதிகாரிகளுக்கும், தீயணைப்பு துறையினர்க்கும் தகவல் அளிக்கப்பட்டது.

இந்த கோர விபத்தில் 3 பெண்கள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர். விபத்தில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கேரள முதல்வர் செய்தியாளர்களை சந்திப்பில் கூறியதாவது, அவினாசி அருகே கேரள பேருந்து விபத்துக்குள்ளானது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு, திருப்பூர் மாவட்ட ஆட்சியருடன் இணைந்து அனைத்து நிவாரண பணிகளும் மேற்கொள்ளப்படும். விபத்தில் சிக்கியவர்களுக்கு உரிய மருத்துவ வசதி வழங்க பாலக்காடு ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று பினராயி விஜயன் கூறினார். விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. விபத்து தொடர்பாக கேரள போக்குவரத்துத்துறை மேலாளர் உரிய விசாரணை நடத்தி அளிக்கை அளிப்பார் என கேரள அமைச்சர் கூறியுள்ளார்.

Related Stories: