நோயாளிகளுடன் தூங்குபவர்களே உஷார் அரசு பொது மருத்துவமனைகளில் தொடரும் திருட்டு சம்பவங்கள்: காவலர் பற்றாக்குறை என குற்றச்சாட்டு

சென்னை: சென்னையில் உள்ள முக்கிய அரசு மருத்துவமனைகளான ராஜிவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை ஆகிய  மருத்துவமனைகளில் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகளின் முக்கிய பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் தொடர் திருட்டு  சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், பல மாதங்களாக போதுமான எண்ணிக்கையில்  காவலர்கள் பணியில் நியமிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.  சென்னை ராஜிவ் காந்தி அரசுப் பொது  மருத்துவமனையில் ஒரு ஷிப்ட்டுக்கு 13 பேர் வீதம் மொத்தம் 39 பேர் பணியில் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.

Advertising
Advertising

ஆனால் ஒரு ஷிப்ட்டுக்கு 4 பேர் என மொத்தமே 12 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். போதிய பாதுகாப்பு இல்லாத நிலையில்  இரண்டு நாட்களுக்கு முன், மருத்துவமனை வளாகத்தில் தூங்கிய ஒருவரின் செல்போனை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றார். இது தவிர பணியாளர்களின் இரு சக்கர வாகனங்களை மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சம்பவங்களும் அரங்கேறி  வருகிறது. காவலர்கள் முறையாக மருத்துவமனை வளாகத்தில் ரவுண்ட்ஸ் சென்றாலே திருடர்கள் நடமாட்டம் குறையும் என்று பொதுமக்கள், நோயாளிகள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: