விமான நிலைய பணி வரைபடம் வெளியீடு தாசில்தார் அதிரடி சஸ்பெண்ட்

சென்னை: பரந்தூர் விமான நிலைய பணி குறித்த வரைபடம் வெளியானதால் சென்னை விமான நிலைய விரிவாக்கப் பணி தாசில்தார், அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் மிக முக்கிய சர்வதேச விமான நிலையமாக உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். வரும் 10 ஆண்டுகளில் சென்னை விமான நிலையம் உள்ள மீனம்பாக்கம்  பகுதி, அதிக நெரிசல் மிகுந்த பகுதியாக மாறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, மக்கள் அதிக அவதிக்குள்ளாகும் நிலை ஏற்படும்.இதை சமாளிக்கும் வகையில் சென்னைக்கு சிறிது வெளியே விமான நிலையம் அமைக்க நிலம் தேடி வந்தனர். அதன்படி காஞ்சிபுரம் - அரக்கோணம் அருகே பரந்தூர், மாமண்டூர் ஆகிய இடங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இறுதியாக  விமான நிலையம் அமைக்க பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக, பரந்தூர் விமான நிலையத்தின் மாதிரி வரைபடம் வாட்ஸ்அப் உள்பட சமூக வலைதளங்களில் பரவியது. இதையறிந்த காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா, விசாரணை நடத்தினார்.அதில், பரந்தூர் விமான நிலையம் நில எடுப்பு தாசில்தார் கருணாகரனுக்கு, மாதிரி வரைபடம் வெளியானதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து நில  எடுப்பு தாசில்தார் கருணாகரனை, கலெக்டர் பொன்னையா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும் இதுகுறித்து விசாரித்து வருகிறார்.

Related Stories: