திசை திருப்புகிறார் அமைச்சர் ஜெயக்குமார்: திமுக பதிலடி

சென்னை: சென்னை தலைமை செயலக வளாகத்தில் முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது: மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரத்தில் திமுகவினர் சம்பந்தப்பட்டிருப்பதாக  கூறியுள்ளார்.  நான் அமைச்சராக இருந்து 10 வருடம் ஆகியுள்ளது. செல்வராஜ் பதவியில் இருந்து 20 வருடம் ஆகியுள்ளது.

இதில், எங்களுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை. நாங்கள் துறைக்கு அமைச்சரும் இல்லை. அவர் மீது வந்திருக்கிற குற்றச்சாட்டுக்கு காரணம், அவர் துறையின் அமைச்சர். அவர் அதற்கு பதில் சொல்வதை விட்டு விட்டு வேண்டுமேன்றே எங்களது பெயரை கூறி திசை திருப்புகிறார். இரண்டாவது, சிபிஐ விசாரணை வேண்டும் என்று திமுகதான் நீதிமன்றத்துக்கு சென்றுள்ளது. நானாவது 2006ல் அமைச்சராக இருந்தேன். செல்வராஜ் அமைச்சராகி 20 வருடம் ஆகிறது. எங்களது பெயரை இழுத்து விட்டு வேடிக்கை பார்க்கிறார்.  இதில், எங்களுக்கு சம்பந்தம் இல்லை என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: