அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்ற 2 பேர் மேல்முறையீடு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை

சென்னை: சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கு விசாரணையின் போது பாபு என்பவர் இறந்துவிட்டதால், மீதமுள்ள 16 பேர் மீதான வழக்கை சென்னை சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது.இந்த வழக்கில் பிப்ரவரி 3ம் தேதி தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட 16 பேரில் குணசேகரன் என்பவரை விடுதலை செய்தது.மீதமுள்ள 15 பேரில் 5 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு 7 ஆண்டு சிறையும், 9 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரி கோரி 5 ஆண்டு சிறை சிறை தண்டனை விதிக்கப்பட்ட உமாபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில்,  எலக்ட்ரீசியனாக பணியாற்றிய தன்னை, வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில் பிளம்பர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் தகவல் அறிக்கையில் தனது பெயர் இடம்  பெறவில்லை. பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே தனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட சிறுமியின் முன்னுக்குப்பின் முரணான வாக்குமூலத்தை விசாரணை நீதிமன்றம் நிராகரித்து இருக்க வேண்டும். தனக்கு விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச தண்டனையான ஐந்து ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும்.மேலும், தண்டனையை நிறுத்தி வைத்து தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார். இதேபோல், தீனதயாள் என்பவரும் தனக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: