மெட்ரோ ரயில் நிலையத்தில் மாணவர்களுக்கு போட்டித்தேர்வு

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், ஸ்ரீசத்ய சாய் சேவா அமைப்புடன் இணைந்து நேற்று சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான போட்டித்தேர்வுகள் நடைபெற்றது.

காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை ஆங்கிலம் மற்றும் தமிழ் வழிக்கல்வியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச தேர்வுகள் நடத்தப்பட்டது. இத்தேர்வில் மாநில கல்வி வாரியம், மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பிரிவுகளில் பயிலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
Advertising
Advertising

இதைத்தொடர்ந்து வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை பாலா விகாஸ் நாடகம் நிகழ்த்தப்பட்டது. சமூக விழிப்புணர்வு மற்றும் ஒரு குடிமகனின் பொறுப்பு ஆகியவற்றை மையமாக வைத்து இந்த நாடகத்தை மாணவர்கள் அறங்கேற்றினர். இதேபோல் சென்ட்ரல் நிலையத்தில் நேற்று இரவு 8.30 மணிக்கு ‘ஆன் தி ஸ்டீரிட் ஆப் சென்னை’ என்கிற இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Related Stories: