புளியந்தோப்பு பகுதியில் முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பூர்: புளியந்தோப்பு ஹை ரோடு பகுதியில் உள்ள மசூதி அருகில் புளியந்தோப்பு பேசின்பிரிட்ஜ் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த முஸ்லீம்கள் 500க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை 6 மணி அளவில் ஒன்று சேர்ந்து குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராகவும், வண்ணாரப்பேட்டையில் தடியடி நடத்திய போலீசாரை கண்டித்தும்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

Advertising
Advertising

Related Stories: