செம்பாக்கம் குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

தாம்பரம்: தாம்பரம் அடுத்த செம்பாக்கம் பிரதான சாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பள்ளி, கோயில், கடைகள் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இந்நிலையில், இப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் செல்போன் டவர் அமைக்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. செல்போன் டவர் அமைத்தால் அதிலிருந்து வரும் கதிர்வீச்சு பொதுமக்களையும், குழந்தைகளையும் பாதிக்கும் என்பதால், இங்கு செல்போன் டவர் அமைக்க கூடாது என அப்பகுதி மக்கள் நேற்று சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், செல்போன் டவர் அமைப்பதா, வேண்டாமா என முடிவெடுக்க கால அவகாசம் வேண்டும் என அந்த வீட்டு உரிமையாளர் சார்பில் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்ததை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘ குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் வைத்தால் கதிர்வீச்சு குழந்தைகளை பாதிக்கும். எனவே இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: