அப்போலோ மருத்துவமனையில் இதய செயலிழப்புக்கு பேஸ்மேக்கர்

சென்னை: இதய செயலிழப்புக்கு அப்போலோ மருத்துவமனையில் புதிய தொழில்நுட்பத்தில் பேஸ்மேக்கர் பொருத்தப்படுவதாக டாக்டர்கள் கூறினர். சென்னை அப்போலோ மருத்துவமனையில் அதிநவீன தொழில்நுட்பத்தில் 4 முதியோர்க்கு இதய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக மருத்துவமனையின் இதய சிகிச்சை டாக்டர் ஏ.எம்.கார்த்திகேசன் கூறியதாவது: இந்த 4 நோயாளிகளுக்கும் குறைந்த இதய துடிப்பு, ரத்த உந்துதல் குறைபாடு இருந்தது. இவர்களுக்கு புதிய தொழில்நுட்பமான “ஹிஸ் பண்டில் பேசிங் நடைமுறை” என்ற தொழில்நுட்ப முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதய துடிப்பு குறைபாட்டை பேஸ்மேக்கர் மூலம் கட்டுப்படுத்துவதற்கான ஒரு  அதிநவீன புதிய தொழில்நுட்பத்துக்கு “ஹிஸ் பண்டில் பேசிங்” என்று பெயர். இந்த தொழில்நுட்பம் பேஸ் மேக்கர் பொருத்தும் போது, இதயத்தின் தசைகளை அது  வலுப்படுத்துகிறது. இதன் மூலம் இதயதுடிப்பு குறைந்து இதயத்தின் செயல்பாடு மோசமடைவது  தடுக்கப்படுகிறது. வழக்கமான பேஸ் மேக்கர் நடைமுறையில் இருந்து இது  மாறுபட்டது.

வழக்கமாக பேஸ்மேக்கர் பொருத்தும் போது, நிமிடத்துக்கு இதயதுடிப்பு 60க்கும் குறைவாக செல்லும்போது, இதயம் செயலிழக்க வாய்ப்புள்ளது. ஆனால் புதிய நடைமுறையின்படி, நிமிடத்திற்கு 60க்கும் குறைவான இதய துடிப்பு உள்ள நோயாளிகளின் இதய துடிப்பு எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இதயத்தில் இருந்து ரத்தம் வெளியேற்றும் வேகத்தை மேம்படுத்துகிறது. இந்த நடைமுறையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் அந்த 4 நோயாளிகளும் குணமடைந்து, அடுத்த நாளே மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர். அதைத்தொடர்ந்து அப்போலோ மருத்துவமனையில் புதிய தொழில்நுட்பத்துடனான நிரந்தர பேஸ் மேக்கர் பொருத்துவது தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் ஏராளமான இதய சிகிச்சை டாக்டர்கள் பங்கேற்றனர். இவ்வாறு கூறினார்.

17 சதவீதம் அதிகரிப்பு:

அப்போலோ மருத்துவமனையின் 2019-20க்கான 3ம் காலாண்டு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. அதில், அப்ேபாலோ மருத்துவ குழுமம் 3ம் காலாண்டில் வருவாய் 17 சதவீதம் வளர்ச்சி பெற்று ₹2,579 கோடியாக உள்ளது. இந்தியா முழுவதும் அப்போலோ மருத்துவ குழுaதுக்கு சொந்தமான மருத்துவமனைகளில் 7,470 படுக்கை வசதி உள்ளது. இதுதவிர புதிதாக 14 மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளது. அவற்றில் 1,990 படுக்கைகள் உள்ளன. 2019-20 நிதியாண்டின் 9 மாதங்களில் 340 புதிய அப்போலோ மருந்து விற்பனை கடைகள் திறக்கப்பட்டுள்ளன, 68 கடைகள் மூடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 3,700 மருந்து விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட காலாண்டில் இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் பல்வேறு விருதுகள் அப்போலோ மருத்துவ குழுமத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: