யோகோஹாமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்ட கப்பலில் 2 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு: ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம் தகவல்

டெல்லி: சினாவில் கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாள்தோறும் கொரோனா  காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. தற்போது, பலியானோர் எண்ணிக்கை 1,110-ஆக உயர்ந்துள்ளது.  சீனாவுக்குப் பிறகு ஜப்பானில்தான் வைரஸ் தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை(89 பேர்) அதிகளவில் உள்ளது. இதற்கிடையில், 3,711 பேருடன் ஜப்பான்  நோக்கிச் சென்று கொண்டிருந்த டைமண்ட் பிரின்சஸ் சொகுசுக் கப்பல், கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக, ஜப்பான் கடல் பகுதியில்  நிறுத்தப்பட்டுள்ளது.

அந்தக் கப்பலில் இருந்து கடந்த மாதம் ஹாங்காங்கில் இறங்கிய பயணிக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து, கப்பல்  தனிமைப்படுத்தி நிறுத்தப்பட்டுள்ளது. அதிலுள்ள பயணிகளுக்கு தினந்தோறும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதில் இதுவரை 300 பேருக்கு  பரிசோதனை முடிவடைந்தது. அவர்களில் 174 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த கப்பலில் 160 இந்தியர்கள் இருப்பதாகக்  கூறப்படுகிறது.

ஆனால், இந்தியர்களுக்கு பாதிப்பு இருப்பதாக இதுவரை கண்டறியப்படவில்லை. இந்த நிலையில், ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில்  தனிமைப்படுத்தப்பட்டு நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் உள்ள இந்தியர்களில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம்  தெரிவித்துள்ளது. 6 தமிழர்கள் உட்பட 100 இந்தியர்கள் கப்பலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: