கம்பம்: கம்பத்திலிருந்து கம்பமெட்டு செல்லும் மலைச்சாலையில் விபத்துகளை தவிர்க்கும் வகையில் சாலையோர தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தேனி மாவட்டம், கம்பத்திலிருந்து 7 கிமீ தொலைவில் மேற்குத்தொடர்ச்சி மலையில் கம்பமெட்டு உள்ளது. இந்த மலைச்சாலையில் மொத்தம் 18 கொண்டை ஊசிவளைவுகள் உள்ளன. இச்சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. விபத்தை தடுக்கும் வகையில் சாலையோரத்தில் இரும்பு தடுப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் ஒரு சில பகுதிகளில் சாலையோரத்தில் தடுப்புகள் இல்லாததால், வாகனங்கள் பள்ளத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி வருகின்றன.