அம்பேத்கர் சிலை பூங்காவை சீரமைக்காவிடில் போராட்டம்: புழல் மக்கள் அறிவிப்பு

புழல்: புழல் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலை பூங்காவை சீரமைக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர். சென்னை  புழல் ஜி.என்.டி சாலை புழல் அம்பத்தூர் செல்லும் சாலை சந்திக்கும் இடத்தில் அம்பேத்கர் சிலை உள்ளது. இங்கு சிலையை சுற்றி தனியார் சார்பில்  பூங்கா  அமைக்கப்பட்டு மக்கள் பயன்படுத்திவந்தனர். சாலை விரிவாக்கத்தின்போது பூங்காவின் ஒரு பகுதி இடம் அகற்றப்பட்டுவிட்டது. இதனால் தற்போது  பூங்காவை  சுற்றி காலி இடமாக உள்ளதால் அந்த இடத்தில் மாடுகள் சுற்றி திரிகிறது. மேலும் இங்குள்ள பஸ் ஸ்டாப்பில் நிழற்குடைகள் இல்லாததால் மழை,  வெயில்  காலங்களில் பொதுமக்கள் கடும் சிரமப்படுகின்றனர்.

இதுகுறித்து மாதவரம் மண்டலம் 23வது வார்டு மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இனிமேலாவது   அதிகாரிகள் செயல்பட்டு அம்பேத்கர் சிலை மற்றும் பஸ் ஸ்டாப் அருகில் மாட்டு சாணங்களை அகற்றி, பூங்காவுக்கு வேலி அமைத்து பாதுகாக்க வேண்டும்   என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து புழல் பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘’அம்பேத்கர் சிலையை சுற்றி பல ஆண்டுகளுக்கு முன்பு பூங்கா   உருவாக்கப்பட்டது.

இதை பொதுமக்கள் பயன்படுத்திவந்தனர். தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தப்பட்டபோது பூங்கா இடம் குறுகிப் போனது. இந்த இடத்தில்  மீண்டும் பூங்காவை  அமைக்க வேண்டும். இங்குள்ள பஸ் ஸ்டாப்பில் நிழற்குடை அமைக்க வேண்டும். இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை  எடுக்வில்லையென்றால் மக்களை திரட்டி  மாபெரும் போராட்டம் நடத்தப்படும்’ என்றனர்.

Related Stories: